TNPSC Thervupettagam

CRISIL ஆராய்ச்சி அறிக்கை – புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  

May 5 , 2020 1669 days 831 0
  • CRISIL அமைப்பானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மொத்தம் நிறுவப்பட்ட ஆற்றல் திறனில் கர்நாடகா (15232 மெகா வாட்) முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • 7278 மெகா வாட் என்ற அளவில் சூரிய ஒளிக்கான மிக அதிக நிறுவப்பட்ட ஆற்றல் திறனை கர்நாடக மாநிலம் கொண்டுள்ளது.
  • கர்நாடகாவின் காற்றாலை ஆற்றல் திறன் 4791 மெகா வாட் ஆகும்.
  • 2020 ஆம் நிதியாண்டில் குஜராத்தின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 10,000 மெகா வாட்டைக் கடந்துள்ளது.
  • கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (14347 மெகா வாட்) ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு நிறுவப்பட்ட ஆற்றல் திறனில் 10 ஜிகா வாட் ஆற்றலைக் கடந்த மூன்றாவது மாநிலம் குஜராத் (10586 மெகா வாட்) ஆகும். 
  • 2020 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த சூரிய ஒளி ஆற்றல் திறன் என்ற அளவில், முதலில் உள்ள மூன்று மாநிலங்கள் குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையாகும். 
இந்தியாவில் உள்ள முக்கியமான சூரிய ஒளி ஆற்றல் ஆலைகள் பின்வருமாறு
  • பட்லா சூரிய ஒளிப் பூங்கா – ஜோத்பூர் மாவட்டம், இராஜஸ்தான் – உலகின் மிகப்பெரிய சூரிய ஒளிப் பூங்கா (2245 மெகா வாட்)
  • பவகடா சூரிய ஒளிப் பூங்கா – தும்கூர் மாவட்டம், கர்நாடகா – உலகின் 2வது மிகப்பெரிய சூரிய ஒளி மின்னழுத்த ஆற்றல் நிலையம் (2050 மெகா வாட்)
  • கமுதி சூரிய ஒளிப் பூங்கா – ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு – உலகின் 12வது மிகப்பெரிய சூரிய ஒளிப் பூங்கா (648 மெகா வாட்)
  • ஒரே இடத்தில் அமைந்த உலகின் மிகப்பெரிய சூரிய ஒளிப் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். 
  • இது அதானி குழுமத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்